search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்"

    • வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.
    • பயணிகளுக்கு ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சாலை எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதில், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்க வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு, ரெயிலில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வந்தடைந்தனர்.

    ரெயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மூலம் பயணிகள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த சிறப்பு ரெயில் நாளை காலை சென்னை வந்தடையும்.

    சிறப்பு ரெயிலானது சற்று நேரத்தில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.

    பயணிகள் அனைவருக்கும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும், ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • 500 பயணிகளும் பஸ்களுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.
    • திருச்செந்தூர் ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்சிற்கு வந்த பிறகு தான் சிறப்பு ரெயில் புறப்படும்.

    ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவிக்கும் 500 பயணிகளை மீட்க அரசும், ரெயில்வே துறையும் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ரெயிலில் உள்ள பயணிகளை மீட்பு குழுவினர் பத்திரமாக நிலையத்திற்கு அழைத்து வருகின்றனர்.

    அங்கிருந்து அவர்களை அழைத்து வர 13 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பஸ்கள் ரெயில் நிலையம் அருகில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. 500 பயணிகளும் பஸ்களுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.

    ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மணியாச்சிக்கு 38 கி.மீ. தூரமாகும். அங்கு வந்து சேரும் பாதிக்கப்பட்ட பயணிகள் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக சிறப்பு ரெயில் ஒன்றை தெற்கு ரெயில்வே இயங்குகிறது. இந்த ரெயில் முழுக்க முழுக்க வெள்ளத்தால் வழியில் சிக்கிக் கொண்ட பயணிகளுக்காக இயக்கப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயில் மணியாச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. சிறப்பு ரெயிலில் உணவு, குடிநீர், பிஸ்கட் பாக்கெட் போன்றவை உள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் சென்னை வந்து சேரும் வரையில் உணவு அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறிய வது:-

    திருச்செந்தூர் ரெயிலில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு பஸ்சிற்கு வந்த பிறகு தான் சிறப்பு ரெயில் புறப்படும். எத்தனை பெட்டிகள், எப்போது ரெயில் புறப்படும் என்பது போன்ற தகவல்கள் பயணிகள் முழுமையாக மீட்கப்பட்டு வந்த பிறகு தான் தெரிய வரும் என்றார்.

    • வாராந்திர சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்காசி:

    நெல்லை-சென்னை எழும்பூர் இடையே (வண்டி எண்-06069) இயக்கப்படும் சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் சுற்றி செல்லும் வகையில் இயக்கப்படுவதால், இந்த ரெயிலில் உள்ள இருக்கைகள் பெரும்பாலும் காலியாகவே இருப்பதாக ரெயில் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    இந்த ரெயிலை நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த வழித்தடத்தில் இயக்கினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் பயணிகள் கூறுகின்றனர்.

    ஏற்கனவே தென்காசி, மதுரை வழியாக 5 மாதங்கள் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்ட நெல்லை-தாம்பரம் ரெயில் 17,303 பயணிகளுடன் ரூ.1.14 கோடி வருமானத்துடன் 108.84 சதவீதம் பயணிகள் பயன்பாட்டுடனும், தாம்பரம்-நெல்லை ரெயில் 16,214 பயணிகளுடன் ரூ.97.61 லட்சம் வருமானத்துடன் 101.72 சதவீத பயணிகள் பயன்பாட்டுடனும் இயங்கியது.

    5 மாதங்களில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்ட இந்த இரு வாராந்திர சிறப்பு ரெயில்களையும் சேர்த்து மொத்தம் 33,517 பயணிகளுடன் ரூ.2.14 கோடி வருமானம் கிடைத்தது.

    ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட வண்டி எண் 06069 சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு ரெயிலில் மொத்தம் உள்ள 1,364 இருக்கைகளில் 892 இருக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது. 35 சதவீத இருக்கைகள் காலியாக சென்றன. இந்த ரெயிலுக்கான மொத்த வருமானமாக வரவேண்டிய ரூ.11 லட்சத்து 44 ஆயிரத்து 483-க்கு பதிலாக ரூ.5 லட்சத்து 39 ஆயிரத்து 128 வருமானமாக கிடைத்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.6.05 லட்சம் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 53 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் நெல்லையில் இருந்து வருமானம் கொழிக்கும் அம்பை, தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தின் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இதுகுறித்து தென்மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஜெகன் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து தென்மாவட்டத்திற்கு செல்லக்கூடிய இந்த சிறப்பு ரெயில் 50 சதவீதம் கூட நிரம்பாததுக்கு முக்கிய காரணம் திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது தான். ஆனால் நெல்லை-தாம்பரம் இடையே தென்காசி வழியாக ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்கள் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

    ரெயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைத்தது. பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் ஆகியவை காத்திருப்போர் பட்டியலுடன் இயங்குவதால் பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தில் அனைத்து இருக்கைகளும் எளிதாக நிரம்பி விடும். எனவே நெல்லையில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை, திண்டுக்கல் வழியாக தாம்பரத்திற்கு இயங்கிய சிறப்பு ரெயில்களை தொடர்ந்து இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2500 பேர் பயணம் செய்து காசி சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
    • தமிழக கவர்னர் ஆர்.என.ரவி சிறப்பு ரெயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    தமிழகத்துக்கும் வாரணாசிக்கும் இடையேயான தொடர்பை பலப்படுத்தும் வகையில் மத்திய அரசு பாரதம், உன்னத பாரதம் திட்டத்தின்கீழ் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு தொடங்கியது.

    கடந்த ஆண்டு நவம்பர் 16-ந்தேதி முதல் டிசம்பர் 16-ந்தேதி வரை ஒருமாதம் நடத்தப்பட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. இதில் 2500 பேர் பயணம் செய்து காசி சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் "காசி தமிழ் சங்கமம் 2.0" என்ற பெயரில் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியை இந்த ஆண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சி நாளை மறுநாள் (17-ந்ேததி) முதல் வருகிற 30-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பை சேர்ந்த தமிழ் மக்கள் சிறப்பு ரெயில்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

    இதன்படி சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 10.40 மணி அளவில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. சென்ட்ரலில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட இந்த ரெயிலில் 3 பெட்டிகளில் 216 மாணவர்கள் புறப்பட்டு சென்றனர். தமிழக கவர்னர் ஆர்.என.ரவி சிறப்பு ரெயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இன்று புறப்பட்ட ரெயில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணி அளவில் வாரணாசியை சென்றடையும். அங்கு தமிழக மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் அன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள். பின்னர் 216 பேரும் வருகிற 20-ந்தேதி வாரணாசியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்கள்.

    இன்று காலையில் சென்னையில் இருந்து புறப்பட்ட சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் 3 சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கோவையில் இருந்து நாளை மறுநாள் (17-ந்தேதி) ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. வருகிற 19, 23, 25, 27 ஆகியதேதிகளிலும் சென்னையில் இருந்து சிறப்பு ரெயில் வாரணாசிக்கு இயக்கப்படுகிறது. வாரணாசியில் இருந்து வருகிற 21, 22, 24, 26, 28, 30 ஆகிய தேதிகளிலும் ஜனவரி 1-ந்தேதியும் தமிழகம் திரும்புவதற்கும் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    2-வது ஆண்டாக மீண்டும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுவது பற்றி பிரதமர் மோடி 'எக்ஸ்' வலைதளத்தில் பெருமிதம் பொங்க கருத்து தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    பழமையான கலாச்சாரங்களின் கொண்டாட்டமான காசி தமிழ் சங்கமத்துக்கு மக்களை உற்சாகமாக வரவேற்க காசி மீண்டும் தயாராகிறது. காசி தமிழ் சங்கமம் கருத்துக்களும் நிகழ்வு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு சான்றாகவும் ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வையும் வலுப்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கூட்ட நெரிசல் காரணமாக பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • மறுமார்க்கமாக மைசூருவில் இருந்து அதே தேதிகளில் மதியம் 1.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் அதேநாள் இரவு சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூட்ட நெரிசல் காரணமாக பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இன்று (புதன்கிழமை) மற்றும் டிசம்பர் 6, 13, 20, 27-ந்தேதிகளில் காலை 5.50 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06037) அதேநாள் மதியம் 12.20 மணிக்கு மைசூரை சென்றடையும்.

    இதேபோல, மறுமார்க்கமாக மைசூருவில் இருந்து அதே தேதிகளில் மதியம் 1.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06038) அதேநாள் இரவு 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு (நாகர்கோவில்-தாம்பரம்) சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு அந்த ரெயில் இந்த மாதம் இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், வார இறுதி நாள் மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரெயில்(06012) அடுத்த மாதம் 3, 10, 17, 24, 31, அடுத்த ஆண்டு ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் சென்னை புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில்(06011) இன்று, அடுத்த மாதம் 4, 11, 18, 25, வருகிற ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    • தஞ்சைக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு 7.35 மணிக்கு சென்று சேருகிறது.
    • வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி ஆகிய ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும்.

    தஞ்சாவூர்:

    திருச்சி கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம் வழியாக வேலூருக்கு சிறப்பு ரெயில் (06117) இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் திருச்சியில் இருந்து நாளை காலை 4.50 மணிக்கு புறப்பட்டு பூதலூர், தஞ்சை, பாபநாசம், கும்பகோணம் வழியாக காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலைக்கும், மதியம் 1 மணிக்கு வேலூ ருக்கும் சென்றடைகிறது.

    அதே ரெயில் மறுமார்க்கத்தில், நாளை வேலூரில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.17 மணிக்கு கும்பகோணம் வந்தடையும், தொடர்ந்து தஞ்சைக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு 7.35 மணிக்கு சென்று சேருகிறது.

    இந்த சிறப்பு ரெயில், திருவெறும்பூர், மயிலாடுதுறை, வைத்தீ ஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருக்கோவிலூர், போளூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியாவிலேயே வந்தே பாரத் ரெயில் முதல் முதலாக இரவு நேரத்தில் இயக்கப்பட உள்ளது.
    • சென்னை சென்டிரலில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் நலனுக்காகவும் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது.

    சென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே வந்தே பாரத் ரெயில் முதல் முதலாக இரவு நேரத்தில் இயக்கப்பட உள்ளது. அந்தவகையில், சென்னை சென்டிரலில் இருந்து இன்று (20-ந்தேதி) மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06031) புறப்பட்டு அதே நாள் இரவு 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, யஸ்வந்த்பூரில் இருந்து நாளை (21-ந்தேதி) இரவு 11 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06032) புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
    • ரெயில் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திரிச்சூர் வழியாக மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடைகிறது.

    சென்னை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 17-ந்தேதி நடை திறக்கப்பட்டது. விரதம் இருந்து வரும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக கோவிலில் குவிந்து வருகிறார்கள். சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது.

    மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடை பெறுகின்றன.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு இன்று முதல் 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளான இன்று (19-ந்தேதி), வருகிற 26-ந்தேதி, டிசம்பர் 3-ந்தேதி, 10-ந்தேதி, 17-ந்தேதி, 24-ந் தேதி, 31-ந்தேதிகளில் சிறப்பு ரெயில்கள்(வண்டி எண்:06027) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திரிச்சூர் வழியாக மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடைகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு எண்.06001 சிறப்பு ரெயில் இன்று (17-ந்தேதி) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
    • மற்றொரு சிறப்பு ரெயில் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு டாடா நகருக்கு இயக்கப்படுகிறது.

    சென்னை:

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். பக்தர்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே சிறப்பு கட்டண ரெயில்களை அறிவித்து உள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு எண்.06001 சிறப்பு ரெயில் இன்று (17-ந்தேதி) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

    இந்த ரெயில் நாளை பகல் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதே போல் திருச்செந்தூரில் இருந்து நாளை (18-ந்தேதி) எண். 06002 சிறப்பு கட்டண ரெயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

    இந்த 2 சிறப்பு ரெயில்களும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோனம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    மற்றொரு சிறப்பு ரெயில் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்டு டாடா நகருக்கு இயக்கப்படுகிறது. இன்று பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த ரெயில் மறுநாள் மாலை 5.30 மணிக்கு டாடா நகர் போய் சேருகிறது.

    • பஞ்சாபில் சிறப்பு ரெயில் நேற்று திடீரென ரத்துசெய்யப்பட்டது.
    • இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஒன்றுகூடி கோஷம் எழுப்பினர்.

    சண்டிகர்:

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், பண்டிகை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்புவதற்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இதேபோல், வடமாநிலங்களில் வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சாத் பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகைக்காகவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, பஞ்சாப்பில் உள்ள சர்ஹிந்த் ரெயில் நிலையத்தில் இருந்து பீகாரின் சஹர்சா வரை செல்லும் சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட இருந்தது. இதில் பயணம் செய்வதற்காக சர்ஹிந்த் ரெயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர்.

    இந்நிலையில், அந்த சிறப்பு ரெயில் திடீரென ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பயணிகள் பிளாட்பாரத்திலும் ரெயில் தண்டவாளத்திலும் ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பினர். அவர்களில் சிலர் கற்களை எடுத்து ரெயில் நிலையம் மீதும், சிலர் நிறுத்தியிருந்த பயணிகள் ரெயில்கள் மீதும் வீசினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தாம்பரத்தில் இருந்து இன்று மற்றும் நவம்பர் 21-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் அடுத்தநாள் காலை ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சென்றடையும்.
    • மறுமார்க்கமாக புவனேஷ்வரில் இருந்து நாளை மற்றும் நவம்பர் 22-ந்தேதி மதியம் புறப்படும் சிறப்பு ரெயில் அடுத்தநாள் மதியம் தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து நாளை (15-ந்தேதி) மற்றும் நவம்பர் 22-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06079) அடுத்தநாள் இரவு 8.45 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் சந்திராகாச்சியை சென்றடையும்.

    மறுமார்க்கமாக சந்திராகாச்சியில் இருந்து நவம்பர்16, 23-ந்தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06080) 18, 25-ந்தேதி காலை 9.35 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

    இதேபோல, தாம்பரத்தில் இருந்து இன்று மற்றும் நவம்பர் 21-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06081) அடுத்தநாள் காலை 9.55 மணிக்கு ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சென்றடையும்.

    மறுமார்க்கமாக புவனேஷ்வரில் இருந்து நாளை மற்றும் நவம்பர் 22-ந்தேதி மதியம் 12.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06082) அடுத்தநாள் மதியம் 12 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×